லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளதோடு லியோ' படத்தின் முதல் சிங்கிள் பாடலான "நா ரெடி" பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "வாய்ப்பு கிடைக்கும் போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன். 'லியோ திரைப்படம் எல்.சி.யூ (LCU)-வா என்று தெரிவதற்கு மூன்று மாதங்கள் உள்ளது. அதை இப்போதே சொல்லிவிட்டால் பின்னர் சொல்லுவதற்கு எதுவும் இருக்காது. 'லியோ' திரைப்படம் கைதி மாதிரியான திரைப்படம்" என்று கூறினார்.
மேலும், மாணவர்கள் உங்கள் படத்தில் கதாநாயகிகள் இறந்துவிடுவார்கள் த்ரிஷாவிற்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு லோகேஷ் எதுவும் ஆகாது என்று பேசினார். மேலும் லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!