• Sep 20 2024

விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யாவா..? ஐந்து மொழிகளிலும் கமல் வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது. கைதி, மாஸ்டர் போன்ற போன்ற ஹிட் படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

படம் வெளியாகி 4 நாட்களில் 75 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது. இந்நிலையில் முதல் வாரக் கடைசியை கடந்துள்ள நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகின்றது. அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து மொழிகளிலும் கிடைத்துள்ள வெற்றியை அடுத்து உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் நன்றி தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் அதிகம் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் சக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி கூறும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என நினைக்கிறேன்" என கமல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் விக்ரம் vs ரோலக்ஸ் கதை அடுத்த படத்தில் முழுவதும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement