• Nov 14 2024

விஷாலுக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் நடக்குமா?அடடே இப்படியொரு பிரச்சனையா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஷாலுக்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே சுற்றி வருகிறார்.

இருந்தாலும் நான் காதல் திருமணம் மட்டும் தான் செய்வேன் என டீனேஜ் பையன் போல எல்லா பேட்டிகளிலும் கூறிக்கொண்டு திரிகிறார் விஷால்.

அது மட்டுமின்றி 'எப்போ திருமணம்?' என அவரிடம் கேட்டால், "தெலுங்கில் பிரபாஸ் முதலில் திருமணம் செய்யட்டும், அதற்கு பின்னர் நான் செய்கிறேன்" என விஷால் ஒரு பேட்டியில் பதில் கூறியிருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் பிரபாஸிடம் 'திருமணம் எப்போது?' என கேட்டதற்கு, 'நிச்சயம் திருமணம் செய்வேன். ஆனால் அது எப்போ என எனக்கே தெரியாது' என தெரிவித்து இருக்கிறார்.



அதனால் விஷால் திருமணம் இந்த ஜென்மத்தில் நடக்குமா என நெட்டிசன்கள் கிண்டலாக கேட்டு வருகின்றனர்.


 

Advertisement

Advertisement