ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் என்று பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இப்படத்தில் நடிகர் சூரியின் நடிப்பு டிரெய்லரிலேயே ஏகோபித்த பாராட்டுகளை பெற்று வருகின்றது. டிரெய்லரில் சூரிக்கு தலையில் அடிபடுவதாக வரும் கிளைமாக்ஸ் காட்சி 15 நாட்களில் படமாக்கப்பட்டதாகவும், நிஜமாகவே அந்த காட்சியில் அவரது தலையில் அடிபட்டதாகவும் அதற்கு காரணம், ரோப் மிஸ் ஆனதுதான் என்றும் இப்படத்தில் பணிபுரிந்து நடித்தவரும், டாணாக்காரன் படத்தின் இயக்குநருமான தமிழரசன் பேட்டி ஒன்றில் பிரத்தியேகமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆவது தொடர்பில் பிரத்தியேக நேர்காணலில் பேசிய நடிகர் சூரி, “நிச்சயமாக நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த வாழ்வும் சரி இந்த தளமும் சரி நான் சற்றும் எதிர் பார்க்காதது. இது தற்போது நல்லபடியாக அமைந்திருக்கிறது என்று நம்புகிறேன். எங்கேயோ இருந்து, எப்படியோ வந்தேன். சினிமாவில் தலைகாட்டவிட மாட்டோமா என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் தாண்டி அதற்கு பல காலகட்டங்கள், எடுத்தது.
அதன் பின்னர் சினிமாவில் அங்குமிங்கமாக தலைகாட்டி, அதன் பிறகும் ஒரு காட்சியில் நடிக்க மாட்டோமா என்று இருந்து, பின்னர் ஒரு நகைச்சுவை நடிகராக திரையில் தோன்றி, அதன் பிறகும் நகைச்சுவை நடிகராக இன்னும் நமக்கு நிறைய மைலேஜ் வேண்டும் என்று அதற்குண்டான மெனக்கெடலை செய்திருக்கிறேன். எனவே அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன், இப்போது வரை அதைச் செய்கிறேன், எப்போதுமே அதற்கான வேலையை செய்து கொண்டேதான் இருப்பேன்” என்று தெரிவித்தார்.
Listen News!