• Sep 20 2024

லெஜண்ட் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிப்பீர்களா-? தமன்னா கூறிய வித்தியாசமான பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகினார்.

இருப்பினும் கல்லூரி என்னும் திரைப்படம் தான் இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய் ,அஜித், சூர்யா எனப் பல நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானார்.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். அதே போல லெஜண்ட் சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இது மட்டுமின்றி சரவணன் அருளுடன் நடிகை தமன்னா சில விளம்பரங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை தமன்னாவிடம், " நீங்கள் சரவணன் அருளுக்கு ஜோடியாக இணைந்து நடிப்பீர்களா " என்று கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தமன்னா " சமீபகாலமாக நான் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தேடி வரும் எல்லா படங்களிலும் ஒப்பு கொள்வவில்லை. அதனால், சரவணன் நடிக்கும் படத்தின் கதையும், எனக்கான கதாப்பாத்திரமும் பிடித்திருந்தால் நடிப்பேன் " என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement