சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் போர் தொழில்.இப்படத்தில் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் அனைவரையும் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய்யின் அரசியல் வருகை பற்றியும், விஜய்யுடன் அரசியலில் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டனர்
அதற்கு பதில் கூறிய சரத்குமார் அவர்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் . மேலும் நீங்கள் ஏன் முதலில் கூட்டணி குறித்து பேசுகிறீர்கள். முதலில் அவர் அரசியலில் கால் பதிக்கட்டும். அப்படி வந்தால் வரவேற்கிறோம் என்று சொல்லிவிட்டேன். உங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும் என்பதால், இப்படி கேள்வி எழுப்புவீர்களா? என காட்டமாகவும் கோபமாகவும் அந்த செய்தியாளரை சாடினார்.
நீங்கள் எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர் என அந்த செய்தியாளரிடம் கோப முகத்தை காட்டிய சரத்குமார், முதலில் உங்கள் முதலாளி இதனை எந்த வியூவில் பார்க்கிறார்? என தெளிவாக கேட்டுக்கொண்டு பேசுங்கள்.
பத்திரிக்கை துறை என்பது சமூகத்தின் நான்காவது தூண் எனவே எப்போதுமே நான் செய்தியாளர்களுக்கு மதிப்பும், மரியாதையும், கொடுப்பேன். இன்று போர் தொழில் படத்தின் வெற்றிக்குக் கூட செய்தியாளர்கள் தான் காரணம் என நான் சொல்லி இருக்கிறேன் என பேசினார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், என்னுடைய கருத்தை ஏற்கனவே நான் கூறிவிட்டேன் ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய கருத்து . விஜய் அரசியலுக்கு வரணுமா, வரக்கூடாதா என்பதை நான் கூற கூடாது. அது அவரவர் விருப்பம் என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!