பசங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் விமல்.இத் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இத்திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மீனாட்சி சுந்தரம், இப்படத்தில் இவர் கைபேசியில் "இங்கிட்டு மீனாட்சி அங்கிட்டு யாரு" என்று பேசிய வசனம் மிகப் பிரபலமானது. இப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார்.
இதைத்தொடர்ந்து விமல் "மஞ்சள் குடை" என்ற படத்தில் நடித்து வருகின்றார். விமலுக்கு ஜோடியாக வால்டர் பட நடிகை ஷெரின் நடித்துள்ளார்.இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர் ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை கனேசன் என்டேர்டைன்மெண்ட் டி ர் ரமேஷ், நாகர் பிலிம்ஸ் ஜாகிர் உசேன் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
பேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையாக இத்திரைப்படம் உருவாகின்றது.இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீடு வாடகை தான்.
அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறான். அதற்குப் பணம் சேர்க்கிறார். புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள் இறுதியில் அவர்கள் வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின்கதை.
படப்பிடிப்பு முழுவதையும் லைவ் லொக்கேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- “நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே”-டி.இராஜேந்திரரை சந்தித்த கமல்
- வட இந்திய ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் விசுவாசமானவர்கள் -நடிகை தமன்னா
- விடாமல் துரத்திய மர்ம நபர்…பதறிப்போய் வீடியோ பதிவிட்ட பிக்பாஸ் நடிகை..!
- தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தனா..வெளியானது தகவல்..!
- மகேஷ் பாபுவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!