லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ, பையனூரில் நடந்ததைத் தொடர்ந்து தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.சமீபத்தில் இப்பாடல் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்கவில்லை 500லிருந்து 800 நடன கலைஞர்கள்தான் பங்கேற்றிருப்பார்கள் என்றும் புதிய தகவல் வெளி வந்து கொண்டிருக்கின்றது.
பாடல் ஷூட்டிங்கை முடித்த கையோடு தற்போது க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை லோகேஷ் படமாக்கிவருகிறார்.படத்தின் க்ளைமேக்ஸில் பிரமாண்டமான சண்டை காட்சி செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும் அதற்காக தயாரிப்பாளர் லலித் குமார் பத்து கோடி ரூபாயை வாரி இறைத்திருக்கிறார் என்ற பேச்சு இன்று காலையிலிருந்து வெளியாகி திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதன் காரணமாக முதலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கையில் சுத்தியலுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் அந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியது. அதனையடுத்து படத்திலிருந்து நா ரெடி என்ற சிங்கிள் பாடல் வெளியானது.
இந்நிலையில் பாடல் வெளியாகி 24 மணி நேரம் முடிவடைந்துள்ளது. இந்தச் சூழலில் யூட்யூபில் இதுவரை நா ரெடி பாடல் 16 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. பாடல் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் இந்த மைல் கல்லை தொட்டிருப்பதால் மேலும் பல சாதனைகளை இந்தப் பாடல் படைக்கும் என விஜய் ரசிகரக்ள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரஷா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளுக்கு காஷ்மீரில் அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!