கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்ததாகவும் தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் மேலும் தன் மீது அபாண்டமான திருட்டு பட்டம் சுமத்துவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரத்யோக ஊடகம் ஒன்றிற்கு சுபாஷ் சந்திர போஸ் அளித்த பேட்டியில்,
இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் மது விருந்து நடத்திய போது தான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி தன்னை அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாகவும் சுபாஷ் சந்திரபோஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு , தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி தன் மீது எச்சில் துப்பியதாகவும் ஆட்களை வைத்து அடித்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி, தான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது தன் புகார் அளித்ததால், என் மீதே புகார் அளிப்பாயா? என பார்வதி நாயர் தன்னிடம் கோபமாக பேசி பாலியல் வன்கொமை செய்ய முயன்றதாக மீண்டும் புகார் அளிக்கவுள்ளதாக தன்னிடம் கூறினார் எனவும் சுபாஸ் சந்திர போஸ் கூறியுள்ளார்.
தான் திருடியதாக சொல்லப்படும் எந்த பொருட்களையுமே இதுவரை அவரது வீட்டில் பார்க்கவில்லை எனவும் கேமராவை சார்ஜ் செய்து பார்வதி நாயர் கையிலே தான் கொடுத்துவிட்டதாகவும் வேண்டுமென்று தன் மீது திருட்டு பட்டம் கட்டுவதாகவும் பார்வதி நாயர் மீது புகாரளித்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
Listen News!