ஜெயகாந்தன் அவர்கள் மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர், துண்டு வெளியீடுகளை எழுதுபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விமர்சகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.
அதுமட்டுமல்லாது 'உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மகள் தீபலட்சுமியின் கணவர் அலோசியஸ் ஜோசப், பிரபல நிதி நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது பீரோவில் இருந்த சுமார் 31 சவரன் நகைகள் காணாமல் போயுள்ளன. இதனைத் தொடர்ந்து தீபலட்சுமியின் கணவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தவகையில் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் பணிபுரியும் சுமித்ரா என்ற பெண் நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் குறித்த பெண் அந்த நகைகளை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த சிரமப்பட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடிச் சென்றதாகவும், குழந்தைகளின் கல்வி செலவுக்காக அவ்வபோது நகைகளை விற்றுள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
Listen News!