• Nov 14 2024

சாதனை செய்த பெண்களையும் பாராட்ட வேண்டும்-“என் ஆதங்கம் இதுதான்“- தற்கொலை செய்த தூரிகையின் வைரலாகும் பேட்டி!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக வலம் வரும் கபிலனின் மகள் நேற்றைய தினம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த விடயம் திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.

முற் போக்கு சிந்தனையுடைய பெண்ணான இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் என்ன என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூரிகை பீயிங் வுமன்  என்ற நிறுவனத்தை தொடங்கிய போது பிரபல சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அதாவது பீயிங் வுமன் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் இந்த பத்திரிக்கையில் இந்த பத்திரிக்கையில் சாதனைபடைத்த பெண்களை கொண்டாடும் பத்திரிக்கையாகும். ஏன் என்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் என்றவுடன் அனிதா,ஹாசினி என பல பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், சாதனை செய்த பெண்கள் என்றால் மதர் தெரேசா,கல்பனா சாவ்லான பெயர் மட்டும்தான் நினைவுக்கு வருகிறது இதுதான் என் ஆதங்கம்.

பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயங்களை பற்றி பேச நிறைய பேர் இருக்காங்க. ஆனால் சாதனையாளர்களை பற்றி பெரிதாக யாரும் பேசுவது இல்லை அதைபற்றி பேசவேண்டும் என்பதற்காக இந்தபத்திரிக்கையை தொடங்கினேன். இதில், பெண்களின் சாதனை, அழகை கொண்டாடப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.பொதுவா ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தும் போது அவர்கள் இன்னும் உயரத்திற்கு செல்வார்கள். ஒரு பெண்ணாக இருந்து மற்றொரு பெண்ணுக்கு அந்த உற்சாகத்தை நான் கொடுக்க நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் தூரிகை பேசிஉள்ளார்.


பெண்களுக்காக ,பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை கொண்ட இவர் இப்படி செய்தது அனைவரையும் சோகத்துக்குள் தள்ளியுள்ளது. அத்தோடு இவருடைய இறுதிச் சடங்கு இன்றைய தினம் அவரது வீட்டில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement