• Sep 20 2024

சேர்ந்து வேலை பார்த்தது செம்மையான அனுபவம் -தி கிரே மேன்' படம் குறித்து கூலாக பதிலளித்த தனுஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் படங்களை எடுத்து புகழ்பெற்ற ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ள 'தி கிரே மேன்' படத்தில், தனுஷ் ஜேக்கப் தி ஹன்டர் என்ற நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் இப்படத்தில் நடித்தது குறித்து பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த தனுஷ், ஹாலிவுட்டில் நடிக்க தனக்கு பயமேதும் இல்லை எனவும் தான் சிறப்பாக நடித்துவிட்டால் இன்னும் சில திறமையான இந்தியர்கள் ஹாலிவுட்டில் தடம் பதிப்பார்கள் என்பது மட்டுமே எனது மனதில் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்ல நடிக்கும் போது மொழியும் நாடும் தான் புதுசா இருந்ததாகவும், ரூசோ பிரதர்ஸ் உடன் சேர்ந்து வேலை பார்த்தது செம்மையான அனுபவம் என்றும் சொல்லியிருந்தார். ரூசோ பிரதர்ஸின் ஒர்க் ஸ்டைலும் சிம்பிளிசிட்டியும் தனக்கு ரொம்பவே உதவியா இருந்ததாகவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளது,

தி கிரே மேன்' படத்தில் தனுஷுடன் இணைந்து ஹாலிவுட் டாப் ஸ்டார்கள் ரையான் காஸ்ஸிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்த இவர்கள் அனைவரும், தனுஷை புகழ்ந்து தள்ளிவிட்டனர். அதனால் தனுஷ் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் அதிகம் நடிக்கலாம் என்ற பேச்சும் அடிபட துவங்கிவிட்டது. தனுஷின் நம்பிக்கையை போல அவர் மட்டும் இல்லாமல், அவருடன் இன்னும் பல திறமையான இந்தியர்களும் ஹாலிவுட்டில் தடம் பதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement