உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி 15 நாட்கள் கடந்த நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் திரைப்படம் விக்ரம். இத் திரைப்படம் கடந்த ஜூன் 3ல் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
மேலும் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி பஹத் பாசில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யாவின் நடித்திருந்தனர். திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதிலும் 230 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இப்படத்தின் சக்சஸ் மீட்டை நேற்று சென்னையில் நடத்தியுள்ளனர். இதில் விக்ரம் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அந்த சக்சஸ் மீட்டில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை பதிவிட்டுள்ளார் அந்தப் பதிவில் "we all love you soo much kamal sir" என்று பதிவிட்டுள்ளார், மற்றும் அத்புகைப்படத்தில் லோகேஷ், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், அனிரூத் என அனைவருக்கும் கமல் முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வெறித்தனமாக வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- மிஸ் இன்டர்நெஷனல் குயின் பட்டத்தை வென்ற பிக்பாஸ் நமிதா மாரிமுத்து
- தனது காதல் மனைவிக்கு வாழ்த்து மழையினைப் பொழிந்த விக்னேஷ் சிவன்- இது தான் காரணமா?
- தவறான பற்சிகிச்சையினால் கொடூரமாக மாறிய பிரபல நடிகையின் முகம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்
- “ஓரமா போடா விளக்கெண்ணெய்” -ப்ளூ சட்டை மாறனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகன்
- குறுகுறு பார்வையில் இளசுகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் கியாரா- லேட்டஸ்ட் போட்டோ சூட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!