தமிழ் சினிமாவில் பல போராட்டங்களின் பின்னர் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் விஜய்சேதுபதி.இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் கதாப்பாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம், உப்பென்னா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டன.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் சந்தித்துள்ளன.அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்திருந்த டிஎஸ்பி திரைப்படம் சில தினங்களுக்கு முதல் வெளியாகியது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் போலீஸாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
அவரது ரசிகர்களே, விஜய்சேதுபதி ஏன் இப்படி ஒரு படத்தில் நடித்தார் என கேட்கும் அளவுக்கு படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.இப்படி நெகடிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், படம் ரிலீசான மறுநாளே படக்குழுவினருடன் இணைந்து விஜய் சேதுபதி கேக்வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடியது நெட்டிசன்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.
இதையடுத்து அப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்யத்தொடங்கினர். இதனால் அப்செட் ஆன விஜய் சேதுபதி, டிஎஸ்பி படத்தை பற்றி தான் பதிவுடும் டுவிட்களுக்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாதபடி கமெண்ட் செக்சனை ஆஃப் செய்துவிட்டு தான் டுவிட் செய்கிறார். நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை தாங்க முடியாமல் தான் விஜய் சேதுபதி இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!