• Sep 20 2024

ஸ்ரீதேவி பக்கத்தில் இருப்பது நடிகை ஜோதிகா என்றால் நம்புவீர்களா? எவ்ளோ க்யூட்டா இருக்காங்க..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை ஜோதிகாவுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் பிறந்தனர். இதையடுத்து குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா.


அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர், அதன்பின் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'காதல் தி கோர்' எனும் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது. அதன்பின் தொடர்ந்து பல  படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா.


இந்த நிலையில், நடிகை ஜோதிகாவின் சின்ன வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அதன்படி, குறித்த புகைப்படம் 80களில் முன்னணி நடிகையாக காணப்பட்ட  ஸ்ரீதேவியுடன் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement