தற்கால சமுதாயத்தில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் தான் இந்த ஓடிடி தளங்களின் பயன்பாடு பன்மடங்காக அதிகரித்தது.
அதே நேரத்தில் ஓடிடி கண்டென்ட்கள் ஆபாசம் மற்றும் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் ஓடிடி கண்டென்ட்களுக்கும் தணிக்கை தேவை என்றும் இதற்கு எதிராக தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சல்மான் கான் கூறுகையில், ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்றும், நல்ல உள்ளடக்கம் கொண்ட கண்டென்ட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளடக்கம் தூய்மையாக இருக்கும்போது, அது சிறப்பானதாக இருக்கும். இப்போதைய நாட்களில் எல்லாமே போனில் வந்து விடுகின்றன. 15-16 வயதுள்ள குழந்தைகளும் கூட இதைப் பார்க்கலாம்" என்றார்.
மேலும் "உங்கள் பெண் தனது தொலைபேசியில் படிப்பதற்கு பதிலாக இதுபோன்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? கண்டென்ட் எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ, அந்தளவிற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடும். தற்போது நாம் நல்ல உள்ளடக்கங்களைத் தரத் தொடங்கியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது தொடர்ந்து நடிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பேசிய சல்மான் கான், "நீங்கள் உங்கள் உடலை வெளிப்படையாகக் காண்பிப்பது, இண்டிமேட் காதல் காட்சிகள் என அனைத்தையும் செய்துவிட்டீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் வீட்டுக்குள் நுழையும் போது, உங்கள் வாட்ச்மேன் நீங்கள் நடித்ததைப் பார்ப்பதை பார்க்கிறீர்கள். இது உங்கள் பாதுகாப்புக்கு மிகவும் நல்லதா? நாம் இந்தியாவில் இருக்கிறோம்" எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார் சல்மான் கான்
Listen News!