தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் அஜித் விஜய் கமல் சரத்குமார் பிரசாந்த் எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் தான் வாலி.இப்படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்திருந்ததோடு இப்படத்தை இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்கியிருந்தார்.
அத்தோடு எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தில் இடம்பெற்ற 'நிலவை கொண்டு வா' பாடலை காமெடியாக ரசிகர்கள் உருவாக்கிய வீடியோ சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் அனுராதா ஸ்ரீராம் ரொம்ப அர்ப்பணிப்பாக பாடுவது போலவும் உன்னிகிருஷ்ணன் காய்ச்சல் காரணமாக மெதுவாக பாடுவது போலவும் அமைந்துள்ளது. இந்நிலையில் சிம்ரன் இந்த காமெடி வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து,
"ரூம் போட்டு யோசிப்பாங்களோ?" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். சிம்ரனின் இப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்ரன் தற்போது ஆர்யாவின் 'கேப்டன்' படத்திலும், பிரசாந்தின் 'அந்தகன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிற செய்திகள்
- யாரு இந்த பொண்ணுங்க…அஜித் ஏன் இவ்வளவு அடக்கமாக நிற்கிறார்-டிரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோ.
- செம த்ரில்லிங் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த விக்டிம் வெப் சீரியலின் ட்ரெய்லர்-நடிப்பில் மிரட்டி எடுக்கும் அமலாபால்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!