விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.தற்போது இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!