• Sep 20 2024

அடடே தனுஷா இது-இவருக்கு இப்படி ஒரு திறமை உள்ளதா..? வைரலாகும் வீடியோ ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தேசிய விருது நாயகன் தனுஷ் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி பிறந்தார் தனுஷ். இவரின் தந்தை கஸ்தூரிராஜா மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் இருவரும் பிரபல இயக்குநர்கள். முன்னதாக தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்னும் படத்தில் மூலம் திரையுலகில் என்றி கொடுத்தவர்.

அத்தோடு கடந்த 2022 ஆம் ஆண்டு திரையுலைகளுக்குள் நுழைந்த இவர் கடுமையான விமர்சங்களுக்கும் , கேலிகளுக்கும் ஆளானார். மிகவும் ஒல்லியாக இருந்த தனுஷின் உருவம் குறித்து பலரும் கேள்வி கிண்டல் செய்தனர். கேலி கிண்டல்களை கடந்து தற்போது தேசிய விருது வென்ற முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் தனுஷ்.

தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், டோலிவுட் , பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது தனது அண்ணனின் இயக்கத்தில் நானே ஒருவன், அதோடு திருச்சிற்றம்பலம், தெலுங்கில் வாத்தி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

மேலும் இதில் க்ரே மேன் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எதிர் நாயகனாக வந்திருந்தார் தனுஷ்.

இவ்வாறுஇருக்கையில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் கரம் பிடித்த தனுஷ் சமீபத்தில் இந்த 18 ஆண்டு திருமண பந்தம் முறிவது குறித்த தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.

அவ்வப்போது பிரபல நிகழ்ச்சிகளில் தனது மகன்களுடன் காட்சியளிக்கிறார் தனுஷ். க்ரே மேன் ப்ரோமோஷன் மற்றும் சிறப்பு காட்சியின் போது தனது மகன்களுடன் தனுஷ் வந்திருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகின. நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர் பாடகராகவும் இருந்து வரும் தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.அந்த வீடியோவில் தனுஷ் பியானோ இசைக்கருவியை அழகாக மீட்டுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement