தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.அத்தோடு இவர் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் அம்மன் படங்களில் நடித்து வந்த இவருக்கு படையப்பா திரைப்படம் தான் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி என்னும் காரெக்டர் இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பாகுபலி திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்ததோடு இதில் இவர் நடித்த ராஜமாதா காரெக்டர் இவரை தென்னிந்திய பிரபல்யமான நடிகையாக மாற்றியுள்ளது.
பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கு பற்றி வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தற்பொழுது லேட்டஸ்டாக புடைவையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- பாக்கியாவை வீட்டுக்கு அழைக்கும் இனியா-கோபி செய்யப் போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட்
- இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன் – அல்லு அர்ஜுன்
- கமலுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்…எந்த படத்தில் தெரியுமா..?
- மறுபடியுமா.. சாந்தினியின் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல்
- தற்கொலை முயற்சி செய்தேனா.. முதன் முறையாக சீரியல் நடிகர் கொடுத்த விளக்கம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!