• Sep 21 2024

அடடா…என்ன ஒரு போஸ்..ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி ஹாசன்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் நடிகை மற்றும் பின்னணிப் பாடகி என பன்முகம் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் , தெலுங்கு, பாலிவுட் என கமிட்டாகி வரும் இவர் கமல்ஹாசனின் முதல் மனைவியான சரிகா தாக்கூரின் மகளாவார்.

எனினும் கடந்த 2010 -ஆண்டு வெளியான இந்த படம் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஸ்ருதி. மேலும் அறிமுக இயக்குநரான சக்ரி டோலெட்டி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் நடித்துள்ளனர்.

இருந்தும் சூர்யாவின் 7-ம் அறிவு இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அத்தோடு முக்கிய ரோலில் நடித்திருந்த இவர் அந்த படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். முன்னதாக தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொண்ணே பாடல் மூலம் பாடகியான ஸ்ருதி.

இதன் பின்னர் தனுஷுடன் 3, விஷாலுடன் பூஜை, விஜயுடன் புலி, அஜித்தின் வேதாளம், சிங்கம் 3-ல் செகண்ட் ஹீரோயின், விஜய் சேதுபதியின் லாபம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். முன்னதாக லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேளுடனான காதல் பிரேக் அப் உள்ளிட்ட காரங்களால் சில காலம் திறத்துறையிலிருந்து தள்ளி இருந்தார்.

தற்போது டேட்டு கலைஞர் சந்தனுவுடன் செட்டிலாகி விட்ட ஸ்ருதி, அவ்வப்போது தங்களது மிதமிஞ்சிய ரொமாண்டிக் காட்சிகளை வெளியிட்டு வருகின்றார். சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகவும் , NBK 107 -ம், "மெகா154" எனும் சிரஞ்சீவியின் பெயரிடப்படாத திரைப்படத்திலும் நாயகியாக கமிட்டாகியுள்ளார் .மேலும் இவர் செம ஸ்லிம் பிட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement