1989 ஆம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த 'சிவா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா. அந்தவகையில் இவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 50இற்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்.
அதிலும் குறிப்பாக இந்தியில் இவர் இயக்கிய ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாது சர்கார், சர்கார் ராஜ், கம்பெனி, நிஷாப்த், ஆக், டிபார்ட்மென்ட், ரத்த சரித்ரா மற்றும் நாச் உள்ளிட்ட படங்களும் அவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் தான்.
ராம் கோபால் வர்மா இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அத்தோடு 2019 ஆம் ஆண்டு கோப்ரா படத்தின் மூலம் நடிகராகவும் ராம் கோபால் அறிமுகமானார். அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இவர் சர்ச்சைக்குரிய இயக்குநர் எனவும் பெயரெடுத்தவர்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் போஸ்ட் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. அதில் பெண் ஒருவரின் வீடியோவை பதிவிட்ட ராம் கோபால் வர்மா "இந்த பெண் யார் என்று தெரிந்தால் தனக்கு உடனே தெரியப்படுத்தவும்" எனக்குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் வீடியோ 16 லட்சம் பார்வையாளர்களை கடந்து தீயாக பரவியமையைத் தொடர்ந்து அந்த பெண்ணின் பெயர் ஸ்ரீ லட்சுமி என்பதைக் கண்டுபிடித்துள்ளார். மேலும் "ஸ்ரீ லட்சுமிக்கு ஆர்வம் இருந்தால், தனக்கு மெசேஜ் அனுப்பவும்" எனவும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
Hey Sreelakshmi https://t.co/JgtBuOXyO0 i just got to know it’s ur birthday today … HAPPPPPYYY BIRTHDAYYYY 💐💐💐 https://t.co/OaeXP9THoj
Listen News!