• Sep 20 2024

யாஷ் இந்த கேரக்டரில் தான் நடிக்க வேண்டும்: ரசிகர்கள் விடுத்த வேண்டுகோள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் கடந்த 2007ம் வெளியான Jambada Hudugi என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யாஷ். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF திரைப்படத்தின் மூலம் இந்த சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறிவிட்டார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய KGF 2 திரைப்படம் வேற லெவலில் ஹிட்டடித்துள்ளது.

இதுவரை கன்னடத்தில் மட்டுமே 21 படங்கள் நடித்துள்ள இவர் இதற்கு மேல் அவர் வேறு மொழிகளிலும் படம் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இப்படி வெற்றி நாயகனாக வலம் வரும் யாஷ் சின்னத்திரையில் 2004ம் ஆண்டே நுழைந்துள்ளார்.

இந்த நிலையில் மராட்டிய மன்னர் சத்ரபதி கேரக்டருக்கு கேஜிஎப் யாஷ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் சிவாஜி படத்தை உருவாக்கினால் யாஷ் தான் சிவாஜி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை ராஜமவுலி இயக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சிவாஜி தோற்றத்தில் யாஷ் இருப்பது போன்று புகைப்படத்தையும் போஸ்டரையும் சித்தரித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றன. இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement