• Nov 14 2024

ஷாலினியின் தம்பியுடன் காதலா..? முதன் முறையாக உண்மையை உடைத்த யாஷிகாவின் தாயார்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் தம்பி தான் ரிச்சர்ட் ரிஷி. இவர் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். இவரும் சிறுவயதில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அஜித்தின் மச்சானான ரிச்சர்ட் ரிஷி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் காதல் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இவர்களின் காதல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகின்றன.

இவ்வாறான கருத்துக்களுக்கு இதுவரை காலமும் ரிஷி மற்றும் யாஷிகா இருவருமே எந்தவித கருத்துமே தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது இந்த காதல் விவகாரம் குறித்து நடிகை யாஷிகாவின் தாயார் முதன்முறையாக கூறியிருக்கின்றார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "யாஷிகாவும், ரிச்சர்ட் ரிஷியும் காதலிப்பதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையுமில்லை, அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம், அவர்கள் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படத்தின் உடைய புகைப்படங்கள் தான், அந்தப் படம் ரிலீஸ் ஆகும் போது உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரிய வரும்" எனக் கூறியுள்ளார்.


எனவே யாஷிகாவின் அம்மா கூறியதை வைத்துப் பார்க்கும் போது இவர்களின் காதல் குறித்து வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்பது தெளிவாகின்றது.

Advertisement

Advertisement