கன்னட சினிமா என்றாலே பிறமொழிகளில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்யும் திரையுலகமாகவே பார்க்கப்பட்டு வந்தது. அதனை தகர்த்தெரிந்து கன்னட படங்களை பிற மொழி ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது கன்னட திரையுலகம். இந்த மாற்றத்திற்கு வித்திட்ட படம் என்றால் அது கே.ஜி.எஃப் தான்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதிலும் அனைத்து மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. இதனால் அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அதன் அடுத்த பாகமும் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. சொன்னபடி 3 ஆண்டுகளில் கே.ஜி.எஃப் 2-ம் பாகம் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் தான் கடந்த வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாகும். இப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ராக்கி பாய் யாஷ் தான். அவரின் நடிப்பு நார்த் முதல் சவுத் வரை அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்தது.
இதனை அடுத்து யாஷ் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இயக்குநர் பி.எஸ்.மித்ரன் யாஷிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும் அந்தக் கதை யாஷிற்கு பிடித்து விட்டதால் அவர் ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு இப்படத்தை பிரமாண்ட நிறுவனமான பிரிஸ்டீச் குரூப் தயாரிப்பதாகவும் இப்படம் பான் இந்தியத் திரைப்படாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!