• Sep 21 2024

ஆமாம், நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் - காபி வித் கரண் நிகழ்ச்சியில் மனம் திறந்த நடிகை கியாரா அத்வானி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட்டின்  இயக்குநரான கரண் ஜோஹர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஜான்வி கபூர், சாரா அலி கான், சமந்தா, அக்‌ஷய் குமார், அர்ஜுன் கபூர், சோனம் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் பாலிவூட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது கரண் உங்களது காதல் பற்றி ரூமர்கள் உலாவுதே உண்மையில், உங்களுக்குள் என்ன ரிலேஷன்ஷிப் என அவர் கேட்க, ஆமாம், நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் என ஓப்பனாக ஒப்புக் கொண்டனர்.

சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி ரசிகர்கள் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர். இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடித்த ஷேர்ஷா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், ரீல் ஜோடிகள் சீக்கிரமாகவே ரியல் ஜோடிகளாக மாற உள்ளனர்.


அடுத்ததாக அப்படியே சும்மா விடாத கரண் ஜோஹர் உங்கள் திருமண திட்டம் தான் என்ன? என்கிற கேள்வியை கேட்க ஷாகித் கபூரின் டோலா டோலா பாட்டுக்கு அவருடனே எங்கள் திருமணத்தில் நானும் சித்தும் நடனமாட கவேண்டும் என தனது திருமண பிளானையும் கியாரா அத்வானி வெட்கத்துடன் கூறியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக  கியாரா அத்வானி நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement