தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பே 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.
இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என மிகப்பெரிய திரையுலக நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் படு பிசியாக நட்சத்திரப் பட்டாளங்களால் நடைபெற்று வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், உலகளவிலும் பிரம்மாண்டமான முறையில் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள பிரம்மாண்ட திரையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அங்கு திரையிடப்பட்ட முதல் தமிழ் பட டிரைலர் என்ற பெருமையும் இப்படத்தினையே சாரும்.
#PS1 Going Global! ✨
The first Tamil Trailer to be screened at 📍Las Vegas, America! 🇺🇸#PonniyinSelvan1 🗡️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @Tentkotta @sarigamacinemas pic.twitter.com/ZgmcDFVbx6
அதேபோன்று இன்றைய தினமும் ஹாலிவுட்டில் பொன்னியின் செல்வன் படத்தை ப்ரமோட் செய்துள்ளனர் லைகா நிறுவனத்தினர். அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹாலிவுட் பகுதி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தின் பேனருடன் விமானம் ஒன்று வட்டமிட்டுள்ளது. படத்தை உலகளவில் ப்ரமோட் செய்யும் வகையில் படக்குழு இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
The Glory of The Great Cholas has Reached📍HOLLYWOOD, USA ✨#PonniyinSelvan1 🗡️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @Tentkotta @sarigamacinemas pic.twitter.com/MsL1aVjAgX
மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
அந்தவகையில் அங்கு மட்டும் முன்பதிவு மூலம் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக திரையுலக வட்டாரத்தினர் கூறுகின்றனர். இதனால் உலகம் பூராகவும் இப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகிய வண்ணம் இருப்பது தெரிகின்றது.
Listen News!