• Nov 17 2024

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.. யோகி பாபு குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


யோகி பாபு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த நிலையில் அந்த காதலை திருமணத்தில் யோகி பாபு முடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராகவும் சில படங்களில் ஹீரோவாகவும் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது உடன் பிறந்த சகோதரர் விஜயன் என்பவர் அவருடைய கால்ஷீட்டை கவனித்து கொண்டு இருக்கிறார்.



இந்த நிலையில் விஜயனுக்கும் மைசூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பின்னர் காதலாக மலர தொடங்கியிருப்பதாக தெரிகிறது, விஜயன் காதலித்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் யோகி பாபு வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், ஆனால் யோகி பாபு அனைவரையும் சமாதானப்படுத்தி பெண் வீட்டாரர்களிடமும் பேசி இந்த திருமணத்தை முடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திரை உலகை சேர்ந்த ஒரு சிலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் கடந்த மூன்றாம் தேதி யோகி பாபுவின் சொந்த ஊரான செய்யாறில் எளிமையாக இந்த திருமணம் நடந்ததாகவும் மணமக்களுக்கு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement