தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
யோகிபாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் யோகிபாவு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மாநகராட்சியினால் உருவாகி வரும் விழிப்புணர்வு குறும்படத்தில் வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் துப்புரவுத் தொழிலாளியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!