• Sep 20 2024

ஷாருக்கானின் ஜவான் படத்திற்காக யோகிபாபு வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் தான் யோகிபாபு. இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். அதன் படி கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து இன்னும் சில படங்களில் நடித்திருந்தாலும் மண்டேலா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இவருக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.இவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார்.


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நடித்து வருகின்றார்.அப்படி ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் நடித்த யோகிபாபு மீண்டும் அவருடன் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார்.


இந்நிலையில் ஜவான் படத்துக்காக யோகிபாபு 40லிருந்து 45 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.படம் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளோடு ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. முக்கியமாக ஷாருக்கான் மட்டுமின்றி நயன்தாராவும் ஆக்‌ஷனில் மாஸ் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement