• Sep 20 2024

சன்னிலியோன் படத்தில் பேய் ஓட்டும் சாமியாராக யோகிபாபு- போஸ்டர் லுக் எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் இயக்குநர் யுவன் இயக்கத்தில் நடிக்கும் தமிழ் படம் தான் ‘Oh My Ghost’.இப்படத்தில் இவருடன் சதீஷ், சஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, , யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில், இப்படத்தில் நடிக்கும் சதீஷின் செகண்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டனர், அதே போல இன்று யோகி பாபுவின் போஸ்டர் லுக் வெளியாகியுள்ளது, அவர் இந்த படத்தில் பேய் விரட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.

அவரது தோற்றம் அதனை தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த படத்தில், சன்னி லியோன் பேயாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒரு ஹாரர் காமெடி என்றும் சன்னி லியோன் இதில் திமிர் பிடித்த ராணியாக நடிக்கிறார். இந்த படத்தில் அவரையே டப்பிங் பேச வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அண்மையில் இப்படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement