தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் கமெடியனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் நடிகர் நாகேஷ்.தாராபுரம் கொழிஞ்சிவாடி என்ற பகுதியில் உள்ள கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன் ஆகும்.
இவரது பெற்றோர் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆவார்கள். தாராபுரத்தில் 10 ஆம் வகுப்பு வரை படித்து வந்த நாகேஷ், கோவையில் உள்ள பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது நாகேஷிற்கு அம்மை நோய் வந்ததால், அவரது முகம் முழுவதும் தழும்புகள் உண்டானது.
கல்லூரி படிப்பை முடித்த நாகேஷ் தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் ரயில் நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் எழுத்தாளராகப் பணியாற்றி வந்தார்.ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
உருவ தோற்றத்தால் கேலி, கிண்டலுக்கு உள்ளான நகைச்சுவை நடிகர் நாகேஷ், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நடிப்பதற்கு உருவம் தேவையில்லை, திறமை இருந்தாலும் போதும் என்பதை தனது நடிப்புத் திறமையின் மூலம் வெளிப்படுத்தி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.
இவரைப் போலவே தற்காலத்தில் உருவக் கேலிக்கு மத்தியில் யோகிபாபு சிறப்பாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றாராம். கிரிக்கெட் மீது அதிக ஆசை கொண்ட இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ஹீரோவாகவும் வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!