பிக் பாஸ் 6 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஷினினும் ஒருவர். இவர் ஒரு திருநங்கை ஆவார். இவர் பொறியியல் கல்வியை கற்று தற்போது ஒரு பொறியியலாளராக இருக்கிறார்.
தனது வாழ்க்கையில் சந்தித்த பல போராட்டங்களுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாகவும், தரமாகவும் விளையாடிய ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சரியான புரிதலுடன் இருந்தார்.
பிக் பாஸ் "ஷிவின் உங்களால் இந்த வீட்டுக்கும், இந்த நிகழ்ச்சிக்கும், ஏன் ஒரு முழு சமூகத்துக்கும் பெருமை. இனி நீங்கள் எந்த ஊருக்கும் போய் ஒளிய வேண்டாம். வெளி உலகத்துல நீங்க காலடி எடுத்து வைக்கும் போது பல தாய்மார்கள் உங்களை அவங்க வீட்டு பொண்ணா நினைச்சு வரவேற்க தயாரா இருக்காங்க" என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
ஷிவின் ஒரு திருநங்கை என்பதால் அவருக்கு ஆறுதலாக ஒரு சிலர் இருந்தாலும் இன்னும் சிலர் இவரை போன்றவர்களை காயப்படுத்துவதையே தொழிலாக செய்து வருகின்றனர். இவ்வாறு ஷிவின் இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு நல்ல விதமாக சில விமர்சனங்கள் வந்தாலும் இன்னும் சிலர் டி.பியை மாத்து, நீயெல்லாம் ஒரு ஆளா? உனக்கு எல்லாம் fans கருமம் என்று அவரை காயப்படுத்தும் வகையில் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். இது ஷிவினின் ரசிகர்களையும் காயப்படுத்தி உள்ளது.
இந்த விமர்சனத்திற்கு ஷிவினின் ரசிகர் ஒருவர் "ஷிவின் அக்கா யார் என்ன சொன்னாலும் நீங்க கண்டுக்காதீங்க, நான் உங்களுடைய பெரிய fan, நீங்க என்னுடைய inspiration, ரோல் மாடல், உங்களோட achievement இந்த world ஓட achievement.. so be like your self என்று பதிலடி கொடுக்கும் வகையாக ஒரு விமர்சனத்தை கூறி இருந்தார்.
Listen News!