• Sep 20 2024

இந்த வீட்டிற்கு நீ லாயக் இல்லை.. கோபத்தில் மைனாவை திட்டித் தீர்க்கும் கணவர்.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதன் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி 11 வாரங்களை அண்மித்துள்ளது. 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது மீதமாக 9 பேர் மாத்திரமே எஞ்சி உள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் எஞ்சி உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். அந்தவகையில் முதல் ப்ரோமோவில் மைனா மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது 2ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


அதில் மைனாவின் கணவர் மைனவை கண்டபாட்டிற்கு திட்டுகின்றார். அதாவது "இந்த பிக்பாஸ் ஷோவிற்கு நீ லாயக் இல்லை, உனக்கும் இதுக்கும் தகுதியே இல்லை, அப்படித்தான் நீ விளையாடிற்று இருக்காய், நீ தப்பு என்று எனக்கு நிரூபிச்சிட்டாய்" எனக் கூறுகின்றார்.

மேலும் "ஒரு தப்பு நடக்கும் போது அதை தட்டிக் கேட்கணும், ஏன் கேட்கிறதற்கு யோசிக்கிறாய், யாராச்சு ஏதாவது சொல்லிடுவாங்களோ என்ற பயம் தானே, அந்தப் பயம் வேணாம்" எனவும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.  


Advertisement

Advertisement