• Nov 17 2024

நீ என் உலக அழகியே உன்னைப் போல் ஒருத்தி இல்லையே... நயன்தாராவை வர்ணிக்கும் விக்னேஷ்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனங்களை வென்ற நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர்.




பலநாள் காதலர்களாக இருந்து வந்த இவர்கள் இருவருக்கும் ஜூன் மாதம் 9-ஆம் திகதி சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, அனிருத் என திரையுலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.



திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதேபோன்றே திருமணத்திற்குப் பிறகும் இவர்கள் சுதந்திர காதல் பறவைகளாகவே சுற்றிக்கொண்டு உள்ளனர். அதாவது முதலில் ஹனிமூன் கொண்டாட தாய்லாந்திற்குச் சென்றனர். அங்கே எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தனர். அதனை அடுத்து நாடு திரும்பிய இவர்கள் இருவரும் தத்தமது கெரியரில் கவனம் செலுத்தி வந்தனர். 



பின்னர் அதிலிருந்து பிரேக் எடுத்து விட்டு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இக்காதல் தம்பதிகள் தாம் எடுத்துக்கொள்ளும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.



அந்த வகையில் தற்பொழுதும் ஸ்பெயின் சாலையில் நின்று நயன்தாரா குட்டை ஷார்ட்ஸ் மற்றும் ரீ சேர்ட் அணிந்தபடி புகைப்படங்கள் எடுத்திருக்கின்றார். இந்தப் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.



அத்தோடு இப்பதிவில் "நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே" எனவும் காதல் ததும்ப குறிப்பிட்டிருக்கின்றார். அத்தோடு இந்தப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement