• Nov 19 2024

இந்த வீட்டிலேயே ரொம்ப நடிக்கிறது நீங்க மட்டும் தான்- ரச்சிதாவை குறிவைக்கும் விக்ரமன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது கொஞ்சம் கூட பரபரப்புக்கு குறைவில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தற்பொழுது கொடுக்கப்பட்ட டாஸ்கினால் போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக அசீம் தனலக்ஷ்மி மகேஷ்வரி ஆயிஷா விக்ரமனின் குரல்களே எப்போதும் அதிகமாகக் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.


இந்த நிலையில் விக்ரமன் ரச்சிதாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.அப்போது இந்த வீட்டில நீங்க பேசிறது தான் சரி மற்றவங்க ஏதாவது சொன்னால் அதில ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிச்சு உடனே குறை சொல்ல வந்திடுவீங்க இந்த நாடகம் எல்லாம் என்னிடம் நடக்காது என ரச்சிதா விக்கிரமனைப் பார்த்து கூறுகின்றார்.


இதற்கு பதிலுக்கு விக்ரமன் யாரு நடிக்கிறாங்க என்று இந்த நிகழ்ச்சியை பார்க்கிற மக்களுக்குத் தெரியும். வந்ததில் இருந்து ஒரு கியூட் பொண்ணு மாதிரி பண்ணிட்டு இருக்கிறீங்க. ஆனால் உங்களுக்குள்ள நிறைய கோபத்தை வச்சிருக்கிறீங்க. இந்த நாடகம் எல்லாம் மக்களுக்குத் தெரியும் என்று செமயாகத் திட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement