விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் புகழ்.இதற்கு முதல் பல காமெடி நிகழ்ச்சிகளில் பெண் வேடம் அணிந்து காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியே இவருக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இவர் தற்பொழுது படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடித்து வருகின்றார். அந்த வகையில் வலிமை, எதற்கும் துணிந்தவன், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் இவர் ண்மையில் தனது நீண்ட நாள் காதலி பென்ஸ் ரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது,
இந்த நிலையில் தற்பொழுது புகழ் திருமணத்தை முடித்த கையோடு மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் படத்தை தொட்டு வணங்கியுள்ளார். அத்தோடு இது குறித்த பதிவு ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியதாவது இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா...உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பிறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமாஎன்று பதிவிட்டுள்ளார்.
Listen News!