• Sep 21 2024

நீங்க தான் டைட்டில் வின்னர்- குக்வித் கோமாளி சீசன் 3இல் அறிவித்த செஃப் வெங்கடேஷ் பட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில், கலந்து கொண்ட போட்டியாளர்களில் கிராஸ் கருணாஸ், வித்யு லேகா, தர்ஷன், ரோஷினி, அம்மு அபிராமி, சுட்டி அரவிந்த் ஆகியோரே மீதமாக உள்ளனர்.

மேலும், ரசிகர்களுக்கு பிடித்த பாலா, ஷிவாங்கி, குரேஷி, மணிமேகலை மற்றும் பல புதிய கோமாளிகளும் நம்மை மகிழ வைத்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது Youtubeல் வெளியாகியுள்ளது.

அதில், கிராஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன் இவர்கள் மூவரில் ஒருவருடைய டிஷ்ஷை சுவைத்த செஃப் வெங்கடேஷ் பட், 'நீங்க மட்டும் இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு சமைத்திருந்தால், நீங்க தான் டைட்டில் வின்னர்' என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த மூவரில் யாருக்கு இந்த வார்த்தையை செஃப் பட் சொன்னார் என்பதை இந்த வார எபிசோட்டில் தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement