• Sep 20 2024

இப்படிப் பண்ணிட்டீங்களே... பழனிச்சாமியிடம் அழுது புலம்பும் பாக்கியா... பெண்களுக்கு கொடுத்த முகத்தடி.. Baakiyalakshmi promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞசம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


அதில் கேன்டீனில் வேலை செய்யும் பெண் ஒருவர் சாப்பாட்டிற்கு உப்புப் போட மறந்து விட்டார். இதனையடுத்து பாக்கியா அந்தப் பெண்ணைத் திட்டுகின்றார். அதுமட்டுமல்லாது பழனிச்சாமியை பார்த்து "இது என்னோட பிஸினஸ் மட்டும் கிடையாது என்னை மோசமாக நடத்தினவங்க முன்னாடி நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன் என்றால் அதற்கு இந்தக் கேன்டீன் தான் காரணம்" எனக் கூறி அழுகின்றார்.


பின்னர் அந்தக் கேன்டீனில் வேலை செய்யும் பெண்களை பார்த்து "இதில மட்டும் நாம தோற்றுப் போய் விட்டோம் என்றால் நம்மள மாதிரி முன்னுக்கு வரணும் என்று நினைக்கிற எல்லாப் பொண்ணுங்களையும் இப்பிடித்தான் நீங்க எல்லாம் சொதப்புவீங்க, உங்களுக்கெல்லாம் எதுவும் வராது என்று கீழ தள்ளுவாங்க, அதற்கு நாமளே இடம் கொடுக்க கூடாது, அவங்க முன்னாடி நாம உயர்ந்து நிற்கணும்" எனக் கூறி அந்தப் பெண்களுக்கு முகத்தடி கொடுக்கின்றார். 

 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 


Advertisement

Advertisement