• Sep 21 2024

அங்கிள் எங்களை விட்டு போயிட்டீங்களே- பிரதாப் போத்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிருத்விராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள முக்கிய நடிகர் தான் பிரதாப் போத்தன் . 70 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனது ஃபிளாட்டில் மரணித்தார்.இவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தென்னிந்திய திரையுலகில் மூத்த நடிகராகவும், சிறந்த இயக்குநராகவும் விளங்கும் இவருடைய மரணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அத்தோடு பிரதாப் போத்தன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

கமல்ஹாசனின் வெற்றி விழா படத்தையே இயக்கியவரும் இவர் தான்.வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தனின் மறைவுக்கு கமல் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், Rest in peace uncle! I will miss you. என உடைந்த இதய எமோஜியை போட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு அங்கிள் எங்களை விட்டு போயிட்டீங்களே எனத் தனது கவலையைத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement