• Sep 21 2024

விஞ்ஞானிகளின் உழைப்பை குறைத்துவிட்டீர்களே மிஸ்டர்- கடும் விமர்சனத்துக்குள்ளான நடிகர் மாதவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மாதவன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் '. இப்படத்தில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கினார் பின்பு அவர் விலகியதை அடுத்து இப்படத்தை மாதவன் இயக்கினார்.

ஜுலை 1ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மாதவன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32,33 முறை செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன.

இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள் என்றார்.

இவருடைய இந்தத் கருத்தால் பஞ்சாங்கத்திற்கும், மார்ஸ் மிஷனுக்கும் சம்பந்தம் இல்லை மிஸ்டர் மாதவன், பஞ்சாங்கத்தை சொல்லி விஞ்ஞானிகளின் உழைப்பை குறைத்துவிட்டீர்களே என அவரை கண்டபடிதிட்டத்தொடங்கிவிட்டனர்.இணையத்தில் விமர்சனங்கள் கண்டபடி பரவியதை அடுத்து, மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம்" என்று அழைத்தேன். இந்த விமர்சனங்களுக்கு நான் தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன். அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்." என்று பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement