• Nov 19 2024

இதுக்கு தான் படிக்கணும் - ஜோவிகாவை இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள். தீயாய் பரவும் காட்சி!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து காெண்ட போட்டியாளர்களில்  நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக கலந்து காெண்டிருக்கின்றார். இந் நிகழ்ச்சியில் தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டதாக கூறி இருந்தார். 


இதற்கு குறைந்தபட்சம் 12ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என அட்வைஸ் சொன்ன விசித்ராவுடன் பெரிய சண்டை போட்டு அந்த பஞ்சாயத்தை கமல்ஹாசன் வரை கொண்டு சென்றார் ஜோவிகா. அதில் கமல்ஹாசன் சொன்ன விடயம் படிப்பு வரவில்லை எனில் விட்டிட வேண்டும் என  சொன்ன விடயம் தற்போது வரை விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது.


இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் குரோசேரி அளவு பார்க்கும் போது 400x4 எவ்வளவு? என தெரியாமல்  முழித்துக் கொண்டிருக்க, மற்றொரு போட்டியாளர் விஜய் வந்து 800 என கூறுகிறார். அது தவறு என கூட ஜோவிகா கண்டுபிடிக்கவில்லை. இதனை வைத்து ரசிக்கள் விமர்சித்து வருகிறார்கள் .


மேலும் கால் கிலோ பாக்கெட் நான்கு சேர்த்தால் எவ்வளவு என ஜோவிகாவுக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் இன்னொரு வீடியோவை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். 

https://twitter.com/Manjula108978/status/1711925760683016337?t=W2140fqCl74afznhSg1uHA&s=19

Advertisement

Advertisement