• Sep 20 2024

நீ கேடுகெட்டவன் என தெரிஞ்சிடுச்சு; சாப்பாட்டுல கைவைச்சா அவ்ளோ தான்! ஜோவிகாவையும் வம்பிழுக்கும் மாயா! காணொளி இணைப்பு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


 20வது நாளாக தொடரும் பிக் பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குறித்த ப்ரோமோவில்,

நாங்க கொடுத்த தான் நீங்க சாப்பிடணும் என பஞ்சாயத்தை ஆரம்பிக்கிறார் யுகேந்திரன்.இதையடுத்து அவருக்கும் மாயாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது.

அந்த வீட்டுக்காக தான் நீங்க விளையாடுறீங்களா என மாயா கேக்க, அவங்க இவ்வளவு நேரம் சாப்பாடு இல்லாம இருந்தாங்க தானே. இப்ப சாப்பிட சொல்லியாச்சு என யுகேந்திரன் கூற, யார் சொன்னா என வம்பிழுக்கின்றனர் மாயாவின் கூட்டணி. இறுதியில் இது தான் ரூல். கேப்டனுக்கு பவர் இருக்கு என சொல்லி முடிக்கிறார் யுகேந்திரன்.

இது ஜோவிகாவின் ஐடியாவா தன இருக்கும். நீங்க சாப்பிட்டுல கைய வைச்சி பாருங்க என மாயா கதறுகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ. பொறுத்திருந்து என்ன நடக்கபோகுது என பார்ப்போம். 


Advertisement

Advertisement