• Sep 21 2024

அமுல் பேபி மாதிரி அழகாக இருக்கிறீங்க சேர்- அடடே நம்ம தயாரிப்பாளர் ரவீந்தரா இது?- ஆள் அடையாளமே தெரியலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக சீரியல் நடிகை மஹாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திடீர் திருமணம் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

குண்டாக இருக்கும் ரவீந்தரை அழகாக இருக்கும் மகாலட்சுமி எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது தான் அனைவரும் எழுப்பிய கேள்வியாக இருந்தது. மறுபுறம் அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாக விமர்சனங்களும் எழுந்தன. 


இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஜோடியாக பேட்டி அளித்து வருகின்றனர்.மேலும் அண்மையில் ரவீந்தர் தனியாக நிற்கும் புகைப்படங்க் வெளியானதால் இருவரும் விவாகரத்துப் பெற்று விட்டனர் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.


ஆனால் அது வதந்தி என்றும் தாங்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதாகவும் மஹாலட்சுமி பதிலடி கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் ரவீந்தர் சில வருடங்களுக்கு முதல் வெளிநாட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் ரவீந்தரா இது எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement