• Sep 21 2024

எல்லா இடத்திலும் அழகை பார்ப்பீர்கள்-ட்ரெக்கிங் பயணத்தில் இயற்கை பற்றி கூறிய ரோஜா சீரியல் கதாநாயகன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபல்யமானவர் தான்  சிபு சூர்யன். இவர் இந்த சீரியலில் அர்ஜூன் என்ற கேரக்டரில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். கதாநாயகியாக ப்ரியங்கா என்பவர் நடித்து வருகின்றார்.

இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இதற்காகவே ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.இந்தத் தொடர் தற்போது ஐந்து ஆண்டுகளை நெருங்கவுள்ளது.


இந்நிலையில் சிபு சூர்யன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி தொடர்ந்து சினிமாவில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இந்நிலையில் ட்ரெக்கிங் செய்ய தன்னுடைய பயணத்தை தொடர்ந்த சிபு, அழகான ஒரு இடத்தில் ஹால்ட் ஆகி இயற்கையை ரசித்ததோடு, அந்தப் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


மேலும் உண்மையிலேயே நீங்கள் இயற்கையை நேசித்தால், எல்லா இடத்திலும் அழகை பார்ப்பீர்கள் என்றும் கருத்து சொல்லியுள்ளார். இந்தப் புகைப்படத்தில்  சிபு மிகவும் ஸ்டைலாக காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement