தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக இருந்தாலும் டாப்பில் இருக்கும் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் அடுத்து இவர் இயக்கி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியிருந்தன. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றார்கள்.இவர்களுடன் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்தும் கூட நடித்து வருகின்றார்கள்.
காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பானது நடந்து வருகின்றது. இப்படம் அக்டோபர் மாதம் 19ம் திகதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருந்து.இப்படத்தின் ரிலீஸிற்குப் பிறகு லோகேஷ் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களை இயக்குவார் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷை அணுகி, லியோ படத்திற்குப் பிறகு தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். அத்தோடு நான் உங்களின் படத்தில் தான் இறுதியாக நடிக்கவுள்ளேன். அதுவே என்னுடைய இறுதிப் படமாக இருக்க வேண்டும் என்றும் கூறினாராம்.
இதனால் லோகேஷ் கைதி 2 படத்தை இயக்குவதா? அல்லது ரஜினியை வைத்து படம் இயக்குவதா என்ற குழப்பத்தில் இருக்கின்றாராம்.லியோ படத்தின் ரிலீஸிற்கு பிறகு தான் லோகேஷ் எடுக்கப் போகும் முடிவு குறித்து வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!