• Nov 14 2024

உங்க அம்மாவும் அக்காவும் பார்க்க வரமாட்டோம் என்று சொல்லிட்டாங்க- உண்மையைக் கூறி கண்ணீர் விட்ட ஷிவினின் தோழி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.தற்பொழுது வீட்டிற்குள் போட்டியாளர்களாக அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

மேலும் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக Freeze Task நடைபெற்று வருகின்றது.இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர்.மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.


மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். அதே போல, அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகளும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தர, ஷிவினின் நண்பர்களும் உள்ளே வந்திருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் பேசிய உருக்கமான விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

Freeze டாஸ்க்கின் போது, ஷிவினின் தோழி மற்றும் நண்பர் ஒருவர் உள்ளே வந்தனர். அப்போது அவர்களை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ஷிவின், அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்றும் வந்ததற்கு நன்றி என்றும்  தெரிவித்தார். ஷிவினின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வரவில்லை என்ற சூழலில், தனது தாயிடம் சண்டை போட்டு தான் ஷிவினை பார்க்க வந்ததையும் அவரது தோழி உருக்கத்துடன் குறிப்பிட்டார்.


அதே போல, ஷிவினின் தாய் மற்றும் அக்காவிடம் பேசியதாகவும் ஆனால் அவர்கள் வரமாட்டோம் என தெரிவித்ததகவும் அவரது தோழி கண்ணீருடன் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க, தன்னை பார்க்க வந்தது பெருமையாக உள்ளதா என ஷிவின் கேட்கிறார். 

அப்போது அவர்கள் இருவரும் தங்களின் நட்பு வட்டாரத்தில் ஷிவின் பேவரைட் போட்டியாளராக இருப்பதாகவும், உன்னை நினைத்து பெருமையாக இருப்பதால் தான் இங்கு வந்தோம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.ஷிவின் தோழி மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ள சூழலில் தங்களின் திருமணத்திற்கு Celebrity வர போவதாகவும் ஜாலியாக குறிப்பிடுகின்றனர். அதே போல, விக்ரமன் தங்களின் ஃபேவரைட் போட்டியாளர் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement