• Sep 20 2024

என்னை முடிக்கணும் என்பது தான் உங்க பிளான் வெளிய போனதுமே இது தான் வேலை- விக்ரமன் போட்டிருக்கும் திட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இன்று மாலையுடன் நிறைவுபெற இருக்கிறது. இதனிடையே இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதுதான் இப்போது சமூக வலை தளங்களில் பேச்சாக இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இன்று மாலை Finale நடைபெற இருப்பதால் வெற்றியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்புடன் பேசி வருகின்றனர். 


முன்னதாக, தனக்கு பரிசாக வந்த கருப்பு நிற உடைகளை விக்ரமன் அணிந்திருந்தார். அப்போது அருகில் நிற்கும் ஷிவின்,"வெளியே போயிட்டு ஹனிமூன் ட்ரிப்-கு பிளான் பண்ணுவீங்க. சும்மா சொன்ன நாடுகளுக்கு எல்லாம் நேரா போவீங்க" என்கிறார். 


அதற்கு விக்ரமன்,"ஏங்க காமெடி பண்றீங்க. வெளியே போட்டு வச்சிருந்த பிளான் எல்லாம் அப்படியே இருக்கும். ட்ரஸ்ட் ஆரம்பிக்கிற வேலையை பார்க்கணும்" என்கிறார். தொடர்ந்து ஜாலியாக பேசும் விக்ரமன்,"நான் வந்த முதல் நாள்ல இருந்து என்னை முடிச்சு அனுப்பனும்-னு தான் உங்களோட பிளான். ஆனா நான் மீறி வந்துட்டேன்" என சிரித்துக்கொண்டே கூறுகிறார். அப்போது ஷிவின்,"உங்களை யாராவது முடிச்சு அனுப்ப முடியுமா விக்ரமன்?" என புன்னகையுடன் கேட்கிறார்.



Advertisement

Advertisement