• Sep 21 2024

நீங்களும் தலைல மிளகாய் அரைக்காமல் சீக்கிரம் வாங்க-விஜய்யை சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நாளை தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதனையொட்டி இவர் நடித்து வரும் லியோ படத்திலிருந்து நா ரெடி தான் வரவா என்ற பாடல் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பாடலை விஜய்யுடன் அனிருத்தும், பிக்பாஸில் கலந்துகொண்ட அசல் கோலாரும் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாடல் ப்ரோமோ நா ரெடிதா வரவா அண்ணன் இறங்கி வரவா என ஆரம்பித்தது. பாடலின் வரிகளை கேட்ட ரசிகர்கள் நிச்சயம் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ்தான் வரும் என நேற்றிலிருந்து ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அதேபோல் ஒரு தரப்பினர் வரிகளை டீகோட் செய்து இந்த வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்தனர்.


இதற்கிடையே 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களை கடந்த 17ஆம் தேதி நேரில் சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு சான்றிதழையும், 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் வழங்கினார். அது பாராட்டை பெற்றாலும் அந்த விழாவில் விஜய் பேச்சின் சில பகுதிகள் அவரது அரசியல் வருகைக்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்பட்டது என்ற விமர்சனத்தை பெற்றுத்தந்தது.


 இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த வரிகளை பகிர்ந்து ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.அவர் அந்த ட்வீட்டில், "தலைவர் மாதிரி 25 வருசம் ரசிகர்களை ஏமாத்தி தலைல மிளகாய் அரைக்காம சீக்கிரமே வாங்கண்ணோவ். எங்களுக்கும் பொழுது போகும். நெறைய கண்டன்ட் கிடைக்கும்" என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு பின்னர் ஜகா வாங்கிவிட்டார். எனவே விஜய்யும் அப்படி செய்யக்கூடாது என்ற தொனியில் ப்ளூ சட்டை பதிவு செய்திருக்கும் இந்த ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் அவருக்கு தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Advertisement

Advertisement