• Sep 20 2024

வாழ்த்து மழையில் நனையும் யுவன்... அட இது தான் விஷயமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து 'காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, நந்தா, ராம், பருத்திவீரன், பில்லா, மங்காத்தா' என அடுத்தடுத்து பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக முன்னேறி இருக்கின்றார்.


தன்னுடைய 16 வயதிலேயே படங்களுக்கு இசையமைக்க தொடங்கிய இவர் இதுவரை 150 இற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். மேலும் சினிமாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவன் இன்றுவரைக்கும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளராகவே தான் திகழ்ந்த வண்ணம் இருக்கின்றார்.


அத்தகைய இசை மேதையான யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் அவரது கலைச் சேவையினைப் பாரட்டி இந்த டாக்டர் பட்டத்தை இவர்கள் யுவனுக்கு வழங்கி உள்ளனர். 


இன்றைய தினம் சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தான் இசையமைப்பாளர் யுவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இவருக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இவர் டாக்டர் பட்டம் பெற்றபோது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement